Thursday, May 9, 2019

அருகி வரும் சிட்டுக்குருவி

முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச்சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப்பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும் வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய
பொருட்களைக் கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.

இவற்றின் கூடுகள் கிண்ண வடிவில் இருக்கும். சிட்டுக்குருவிகள் தானியங்களையும் புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். ஆண் பெண் இண்டுமே முட்டைகளையும் இளம் உயிர்களையும் பாதுகாத்து வளர்க்கின்றன. குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியவுடன்
தனியே பிரிந்து விடுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகமெங்கும் மரங்களும் பறவைகளும் குறைந்தும் அழிந்தும் வருகின்றன. பல நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் முற்றிலுமாக அழிந்து விட்டன.

அலைபேசியிலிருந்து வரும் மின்காந்த அலைகளின் தாக்கம் இந்தக் குருவியினத்தின் இனப்பெருக்க மண்டலத்தைத் தாக்கி அவற்றை மலடாக மாற்றிவிடுவதால் இவற்றால் தங்கள் இனத்தைப் பெருக்க முடியவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டி வருகிறார்கள்.

எனவே மார்ச் 20ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாகக் கொண்டாடி சிட்டுக்குருவிகளைக் காக்க போராடி வருகின்றனர். இதை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன.

பயனீட்டாளர் குரல்   செப்டம்பர் - அக்டோபர் 2013
#gt_sparow2019


No comments:

Post a Comment