Thursday, May 9, 2019

குப்பை தின்னும் யானைகள்

யானைகள் தாவரங்களையும் இலை தழைகளையு ம்உண்ணும். மூங்கில், கரும்பு போன்றவற்றை மிக விரும்பிஉண்ணும். நன்கு வளர்ந்த யானைகள் நாளொன்றுக்கு சுமார்140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.ஆனால் இதுவெல்லாம் உண்ணக்
கிடைக்காத யானைகள் என்னசெய்யும். கிரிக் - ஜெல்லி நெடுஞ்சாலையில்மக்கள் பார்த்த அதிர்ச்சிக் காட்சி குப்பைகளைத் தின்னும் யானைகள்தாம்.

இந்தச் செய்தி நம் நாட்டுப் பத்திரிகைகளின்வெளியாகியிருந்தது.
யானைகள் உணவு உட்கொள்ளவேண்டும் அவற்றுக்கு இலை
தழைகள் வேண்டும். இலைதழைகள் வேண்டும் என்றால்
அவற்றைக் உள்ளடக்கிய காடுகள் வேண்டும்.

ஆனால் காடுகள் அழிக்கப்படும்பொழுது யானைகள் இலை தழைகளுக்கு எங்கேபோகும். ஆகையால் தன்னுடைய வயிற்றுப் பசியைப் போக்கஅவை குப்பைகளைஉட்கொள்ள ஆரம்பித்துள்ளன.

யானைகள் மட்டுமல்ல. μராங் ஊத்தானுக்கும் இதே கதிதான்.
இவை வாழும் காடுகளும் அழிக்கப்பட்டு விட்டதால் செம்பனைத் தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேட ஆரம்பித்து விட்டன.
புவியில் மனித இனம் அதிகரித்துக் கொண்டே போகின்ற காரணத்தால் மனிதர்களும் வனவிலங்குகளும்
வாழ்விடத்திற்காகப் போட்டி போடும் நிலை உருவாகிவிட்டது.

மனிதன் தொடர்ந்து காடுகளை அழித்து வருவதால் வனவிலங்குகளின் வாழ்விடம் சுருங்கிப்போய்விட்டது.
வன மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யானைகளைக் காக்க போராடி வருகின்றனர். ஆனால் இப்படி கண்ட இடத்தில் குப்பை போடும் மனித துர்நடவடிக்கையால் யானை வெகு விரைவிலேயே அழியக்கூடும். பிளாஸ்டிக் பைகளை விழுங்கும் யானைகள் திடீர் மரணத்தை எய்தும். யானை மட்டுமல்ல, மாடு, ஆடு, பன்றி மற்றும் இன்னும் எல்லா கால்நடைகளும் பிளாஸ்டிக்கை விழுங்கினால் இறக்கத்தான் செய்யும். இந்தியாவில் தெருவோரங்களில் சுற்றித் திரியும் பிராணிகள் பிளாஸ்டிக் உட்கொள்வதால்தான் அதிக அளவில் இறந்துபோகின்றன.

அழுகிப்போன உணவுகளை உண்ணும் பிராணிகளும் அவற்றில் உள்ள புழுவின் மூலம் தொற்றுநோய்க்கிருமிகள் தாக்கப்பட்டு இறந்துபோகின்றன. மனிதர்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் உள்ள உணவு வாசனை, குறிப்பாக பழ வாசனையால் யானைகள் ஈர்க்கப்பட்டு அவற்றை நாடி வரலாம். ஆனால் பிளாஸ்டிக்கில்
யா உள்ள பழமோ அவற்றின் ஒரு துளி பசியைக் கூட நிரப்ப முடியாது.

குப்பைகளைக் கண்ட கண்ட இடங்களில் தூக்கிப்போடும் மனிதர்களின் அலட்சியப் போக்கு இயற்கை வளங்களின் பொக்கிஷமான மிருகங்களின் அழிவிற்கு இட்டுச் செல்கிறது. உணவு தேடி காட்டை விட்டு வெளியேறும் யானைகளின் திடீர்ப் பிரவேசம் மனிதர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் அவை வெளியேறுவதற்குக் காரணமே மனிதர்கள்தானே. சாலையைக் கடக்கும் சில யானைகள் ம னிதர்கள் தட்டுப் படும் பொழுதுஅவர்களை மூர்க்கமாகத் தாக்கி விடுகின்றன.

சில  வேளைகளில் இது வாகன விப த் து க் க ளு க் கு ம் இட்டுச் சென்று விடுகிறது. இப்படி சாலைகளில் தூக்கி எறியப்படும் குப்பைகள்தான் அவற்றை சாலை ஓரத்திற்கு இட்டுச் செல்கின்றன  என்பதை யானைகளால் விபத்துக்குள்ளாகும் மனிதர்கள் உணர
வேண்டும்.

நம் நாட்டில் யானைகளை காப்பாற்ற மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இணைந்து நடவடிக்கைளை மேற்கொள்வது அவசியமாகும்.

https://www.dailymail.co.uk/news/article-4850492/Elephants-seen-eating-bags-rubbish-dump-site.html

No comments:

Post a Comment